மருத்துவ கழிவுகளை கொண்டு செல்ல லாரிகளுடன் வந்த கேரளா அதிகாரிகள்!
திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தமிழக அரசு வழக்கறிஞர், ‘கேரளத்திலிருந்து லாரிகளில்…