Editor

ஜப்பானின் ஒரு மாகாணத்தில் சிரிப்பதை கட்டாயப்படுத்தி சட்டம்..!! 

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பார்கள்.  அதற்கேட்ப ஒரு நாட்டில் சிரிப்பதை கட்டாயப்படுத்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் யமகாட்டா ப்ரீஃபெக்சர் மாகாணத்தில் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிரிப்பதற்கு என்றே மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கியுள்ளது இந்த சட்டம். ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாள் மக்கள் சிரிப்பதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் நாளொன்றுக்கு ஒருமுறை வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பணியிடங்களில் சிரிப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்கவும் அலுவலக…

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

உலகலவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்,  பிலிப்பின்ஸின் மின்டானோவோவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இன்று காலை 10.13 (பெய்ஜிங் நேரப்படி) ரிக்டர் அளவில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நிலநடுக்கம் 620 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. அதன் மையம் 6.1 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 123.3 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை…

மேலும் படிக்க

பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்..!!

தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹுவாஸ்காரன்’ மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்ஃபில் என்ற மலையேற்ற வீரர் அவரது நண்பர்களான மேத்யூ ரிச்சர்ட்சன், ஸ்டீவ் எர்ஸ்கைன் ஆகியோருடன் ஹுவாஸ்காரன் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வில்லியம் ஸ்டாம்ஃபில் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.இந்நிலையில் 22…

மேலும் படிக்க

‘ஏர் கேரளா’ : 2025-ஆம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை தொடங்கும்..!!

கேரளாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடாவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களான அஃபி அஹமது மற்றும் அயூப் கல்லடா இருவரும் இந்த திட்டத்தை தொடங்க ஆர்வம் காட்டினார்.  கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளா விமான நிறுவனத்தை உருவாக்கினார். தொடர்ந்து ஏர் கேரளா இணையதள டொமைனை கைப்பற்றி நிறுவனத்தை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டினர். அதன்படி, கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து அது சாத்தியமாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் கேரளா விமான நிறுவனம் தொடங்க மத்திய சிவில்…

மேலும் படிக்க

உத்திரபிரதேசத்தில் 35 நாள்களில் 6 முறை ஒரே மனிதனை சீண்டிய பாம்புகள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் விகாஸ் துபே. இவரை கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 6 முறை பாம்பு கடித்துள்ளதாம். ஒவ்வொரு முறையும் பாம்புகள் அவரை கடிப்பதும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதும், பிறகு குணமடைந்து வீடு திரும்புவதும் தொடர்கதையாக இருந்திருக்கிறது. கடந்த ஜூன் 2ம் தேதி இந்த அத்தியாயத்தின் முதல் சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் அவரது வீட்டில் பாம்பு…

மேலும் படிக்க

‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது..!!

துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. 80களின் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படம் ஒரு வங்கியாளரின் மர்மமான செல்வங்களை ஆராய்கிறது. லக்கி பாஸ்கர்’ படத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மற்றும் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி பெண் நாயகியாக நடிக்கிறார். ஒரு நடுத்தர வர்க்க வங்கியாளரின் வாழ்க்கையில் நடிகர் நடிக்கிறார், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.லக்கி பாஸ்கர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் செப்டம்பர் 7ம்…

மேலும் படிக்க

காஸாவில் பள்ளி மீது தாக்குதல்..!!

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்நிலையில், மத்திய காஸாவின் நுசீரத்தில் அமைந்துள்ள அல்-ஜாவ்னி பள்ளி மீது நேற்று (ஜூலை 6) இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பாலஸ்தீன சுகாதாரத்துறை…

மேலும் படிக்க

தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி..!!

இன்று (ஜூலை 5) காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவித்திருந்தது. கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 410 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையோடு தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கும் எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே…

மேலும் படிக்க

ஜூலை 10 வரை மழைக்கு வாய்ப்பு..!!!

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.  அதிலும் வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.  ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது.  சென்னையில் மட்டும் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது.  வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.பல இடங்களில் கோடை மழை கொஞ்சம் வெக்கையை தணித்தது….

மேலும் படிக்க

நடிகை ‘அதுல்யா’ வீட்டில் திருட்டு..!!

கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதுல்யா ரவி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2000 பணம் திருடு போயியுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து, வடவள்ளி காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அதுல்யா ரவி வீட்டில் வேலை செய்து வந்த செல்வி (46) என்பவரிடம் போலீசார்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram