ஐபோனுக்காக 8 வயது தங்கையிடம் சண்டையிட்டு, கழுத்தை நெரித்துக் கொன்ற 12 வயது அக்கா..!!
அமெரிக்காவின் டென்னிசியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பெற்றோர்களுடன் கோடை விடுமுறைக்காக சிறுமிகள் 2 சென்றுள்ளனர். ஒருவரின் வயது 12, மற்றொருவரின் வயது 8. இந்நிலையில் ஐபோன் தொடர்பாக அக்கா, தங்கை இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த 12 வயது சிறுமி தனது தங்கை தூங்கும்போது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். மேலும், தன் மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் குற்றத்தை மறைக்க தங்கையின் உடலை கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்துள்ளார்.