கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள 5 மாடி குடியிருப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகத்தால் இந்த தீ வேகமாக பரவி கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது. இதில் குழந்தைகள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இத்தீவிபத்துக்கான காரணத்தை அந்நாட்டு அரசு விசாரித்து வந்தது.
இந்நிலையில், இத்தீவிபத்துக்கான குற்றாவாளியை தென்னாப்பிரிக்க அரசு நேற்று கைது செய்துள்ளது. விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் போலீசார் மட்டுமல்ல அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதுடைய அந்த குற்றவாளி, தீ விபத்தன்று ஒரு நபரை அடித்து கொன்றுள்ளார். பின்னர் அதிலிருந்து தப்பிக்கவும் அந்த கொலையை மறைக்கவும் இறந்தவரை தீ வைத்து எரித்துள்ளார். இந்த தீ காற்றின் வேகத்தால் கட்டடம் முழுவதும் பரவத் தொடங்கியதால் மளமளவென் தீப்பற்றியுள்ளது கட்டடம் முழுவதும் பரவியது. இதில் தான் அந்த கட்டடத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 76பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.