மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3- வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், டி-20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளும் அடங்கும். ஏற்கனவே கும்ளே, ஹர்பஜன் சிங் 700 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
கும்ளே – 953 விக்கெட், (449)
ஹர்பஜன் சிங்- 707 விக்கெட் (442)
அஸ்வின் – 702* விக்கெட் (351)
மேலும் 33 முறை அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தந்தை. மகன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். தற்போது நடைபெற்றும் வரும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான, சிவ்நரைன் சந்தர்பாலின் மகன் டேகனரைன் சந்தர்பாலின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார்.
NEWS EDITOR : RP