ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், எக்ஸ் பக்கத்தில், வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. 2024ஆம் ஆண்டு முற்பகுதியில் வெளிவரும் என்ற பதிவுடன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தூங்கும் பெட்டிகளின் உட்புற வடிவமைப்பு படிப்படியாக இறுதி செய்யப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறையின் தேவைகளை கருத்தில் கொண்டு தூங்குவதற்கு போதுமான இடம் மற்றும் மேல் படுக்கையை பெறுபவர்களுக்கு வசதியான படிக்கட்டு வடிவமைப்பு பணிகள் ஆகியவை பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரும் 2024-ம் ஆண்டு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட வந்தேபாரத் படுக்கை வசதி கொண்ட முதல் ரயிலின் மாதிரியில் 857 படுக்கைகளை கொண்டது. ரயில்வே திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ரூ.1.4 லட்சம் கோடி ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP