தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: