விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பெரும் அளவில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனை தொடர்ந்து, இக்கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
Please follow and like us: