Spread the love

சுவிட்சர்லாந்து நாடு ஒரு சிறிய நாடாக இருந்தாலும் அது சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.  வானை தொடும் ஆல்ப்ஸ் மற்றும்  பனிப்பாறைகள்,  அத்துடன்அழகிய நிலப்பரப்பு, பழைய அரண்மனைகள், தூய டர்க்கைஸ் ஏரிகள் மற்றும் ஒவ்வொரு திசையிலும் உள்ள கம்பீரமான மலைச் சிகரங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். ஐரோப்பாவின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான ரைன் நீர்வீழ்ச்சி  சுவிட்சர்லாந்திற்கு வருபவர்களை ஈர்க்கும் இயற்கை அழகு என்றே கூறலாம். சர்வதேச சுற்றுலாத்தலமான சுவிட்சர்லாந்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

டெல்லியில் உள்ள சுவிஸ் தூதரகம், இந்திய சுற்றுலாக் குழுக்களுக்கான ஷெங்கன் விசா  விண்ணப்பங்களை அக்டோபர் வரை நிறுத்தி வைத்துள்ளது. விசா செயலாக்கத்திற்கு போதுமான நேரத்தை அனுமதிக்க, குழு பயணங்களை மீண்டும் திட்டமிடுமாறு சுற்றுலா ஆபரேட்டர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சுற்றுலா பயண ஆப்ரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைக் கையாள்வதில் உள்ள சவால்களுக்கு மத்தியில் தூதரகத்தின் முடிவு வெளியாகியுள்ளது.  இந்த அறிவிப்பால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படுவதாக சுற்றுலா பயண ஆப்ரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியர்களைத் தவிர, குழுவாக சுவிட்சர்லாந்திற்குச் செல்ல விரும்பும்  சீனா சுற்றுலா பயணிகளையும் ஊழியர்கள் பற்றாக்குறை  பாதிக்கிறது.

மேலும் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை சரியான நேரத்தில் செயலாக்க முடியவில்லை. 2019 ஆம் ஆண்டில் வந்த 94 சதவீத விசா விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்தின் மத்திய வெளியுறவுத் துறை தற்போது செயல்படுத்தி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பு, சீனாவில் சுமார் 17 விசா செயலாக்க மையங்கள் இருந்தன. ஆனால் தொற்றுநோய் காரணமாக, செயல்பாடு திடீரென நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், தூதரகங்கள் சிக்கல்களைக் கையாண்டு வருகின்றன.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

By Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram