தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-22-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 30 முக்கிய திட்டங்களை அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.
இந்த விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலா தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமானநிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளின் 2-ம் பதிப்பு 27.9.2023 அன்று வழங்கப்படும்.
விருது வகைகளாக சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த பயண கூட்டாளர், சிறந்த விமான கூட்டாளர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், விண்ணப்பிக்க கடைசி தேதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் சிறந்து செயலாற்றுபவர். சுற்றுலா ஆபரேட்டர். சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தளம் ஆபரேட்டர். சிறந்த கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர். சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர். சிறந்த சுற்றுலா வழிகாட்டி. தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம். சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர பொருள். சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான 27.9.2023 சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15-ந்தேதி ஆகும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும்.
NEWS EDITOR : RP