லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
NEWS EDITOR : RP
Please follow and like us: