சென்னை கோயம்பேடு போலீஸ் மாவட்டம் சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் கோயம்பேட்டில் நேற்று காலை நடைபெற்றது. சென்னை இந்த மாரத்தான் ஓட்டத்தை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கி வைத்தார். கோயம்பேட்டில் தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டம் வானகரத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஓடினர்.
பின்னர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். அதைதொடர்ந்து சிலம்பாட்டம், பரதநாட்டியம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கணபதி, பிரபாகர ராஜா, கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் மனோகர் மற்றும் நடிகர் ரோபோ சங்கர் உள்பட நடிகர், நடிகைகள், போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
NEWS EDITOR : RP