பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள முச்சல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாவ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 20 வயதில் மகள் ஒருவர் இருந்தார்.இந்த நிலையில் அவரது மகள் கடந்த புதன்கிழமை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தார்.அப்போது, யாரிடமும் சொல்லாமல் எங்கு சென்றாய்? ஒரு நாள் முழுவதும் வீட்டுக்கு வராதது ஏன்? என கேட்டு பாவ் தனது மகளுடன் சண்டையிட்டார்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பாவ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து மகளை வெட்டிக்கொலை செய்தார். பின்னர் அவர் மகளின் உடலை தனது மோட்டார்சைக்கிளில் கட்டி கிராமம் முழுவதும் தரதரவென இழுத்து சென்றார்.அதை தொடர்ந்து பாவ் தனது மகளின் உடலை ரெயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றார்.
NEWS EDITOR : RP