சென்னை, அந்தமான் நிகோபார் தீவுகளில், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களை சேர்ந்தோர் அதிகம் வசிக்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து, அந்தமான் தீவுக்கு, தினமும், 14 முறை விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படாததால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
122 பயணிகளுடன் காலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தமானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
NEWS EDITOR : RP