தென்கொரியாவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தின் விளம்பர பலகை தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தென்கொரியாவின் இன்சியா நகரத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம் “நன்னடத்தை மற்றும் நேர்த்தியான கட்டமைப்பை உடைய பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்ற வாசகத்தோடு விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளது. இந்த அறிவிப்பு அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வயதான பெண்களின் சில செயல்களால் இளம்பெண்கள் பலர் உடற்பயிற்சிக்கு கூடத்திற்கு வர மறுக்கின்றனர். அவர்கள் மற்றவர்களின் உடல்களை பார்த்து தேவையற்றதை பேசுவார்கள். சில பொருட்களையும் திருடுவார்கள். அவர்களின் நடத்தை காரணமும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.
Please follow and like us: