தள்ளுவண்டி கடைநடத்தும் பிச்எடி மாணவரால் வியந்த அமெரிக்கர்..!!

Spread the love

நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் அதேவேளையில் கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதேவேளையில், ஸ்டார்ட்அப் தொடங்க முடியாத பலரும் தங்களுக்கு தெரிந்த தொழில்களை சிறிய அளவில் செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பலரும் தாங்கள் படித்த படிப்புக்கு வேலை இல்லாத காரணத்தால் டீக்கடை, பானிப்பூரி, ஹோட்டல், துரித உணவகம் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

எம்பிஏ படித்தவர் டீக்கடை வைத்திருப்பதாகவும், பிடெக் படித்தவர் பானிபூரி கடை நடத்துவதாகவும் கூறிய வீடியோக்கள் இணையதளத்தில் அதிகமாக பரவி பாராட்டுகளை குவித்தது. இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதாவது சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பயோ டெக்னாலஜியில் பிஎச்டி படித்து கொண்டே தள்ளுவண்டியில் துரித உணவகம் (Fast Food) நடத்தி வரும் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.தமிழ்நாட்டில் சுற்றுலா வந்த, அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் லீவிஸ் சென்னையில் பல இடங்களை சுற்றி பார்த்து வீடியோ பதிவிட்டு வந்தார். தான் Vlogger என்பதால் தான் செல்லும் இடம் மற்றும் சந்திக்கும் நபர்களை வீடியோவாக பதிவு செய்து அதனை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கிறிஸ்டோபர் லீவிஸ் சென்னையில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.

வீடியோவில் கிறிஸ்டோபர் லீவிஸ் தள்ளுவண்டியில் செயல்படும் துரித உணவகத்துக்கு செல்கிறார். அங்கு இளைஞர் நிற்கிறார். அவரிடம் கிறிஸ்டோபர் லீவிஸ், ‛‛ஹாய் ப்ரோ, எப்படி இருக்கிறீர்கள். சிக்கன் 65 ஒரு பிளேட் எவ்வளவு?” என கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர், ‛‛நான் நன்றாக இருக்கிறேன். 100 கிராம் சிக்கன் ரூ.50” என பதிலளிக்கிறார். இதையடுத்து கிறிஸ்டோபர் லீவிஸ், ‛‛எனக்கு 100 கிராம் சிக்கன் தாருங்கள் ப்ரதர். உங்களின் கடையை கூகுள் மேப் மூலம் அறிந்து கொண்டு வந்தேன்” எனக்கூறினார்.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram