தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநில அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் 3 பிரிவுகளில் 313 பேருக்கு இளங்கலை பட்டமும், 51 பேருக்கு முதுகலை
பட்டமும் , 22 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. முதல் மதிப்பெண் பெற்ற 15
மாணவர்களுக்கு விருதுகளுடன் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மொத்தம் 383 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.
நேரடியாக 297 மாணவர்களும், தபால் மூலமாக 16 மாணவர்களும் இளங்கலை பட்டம் பெற்றனர். நேரடியாக 36 மாணவர்களும், தபால் மூலமாக 15 மாணவர்களும் முதுகலை பட்டம் பெற்றனர். நேரடியாக 19 மாணவர்களும், தபால் மூலமாக 3 மாணவர்களும் முனைவர் பட்டம் பெற்றனர்.இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர், கோ. சுகுமார் வரவேற்புரை வழங்கி பல்கலைக்கழக ஆண்டறிக்கையை வாசித்தார்.
மேலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவி தமிழ்நாடு டாக்டர்
ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் படிப்பில் 14
தங்கப் பதக்கங்கள் வெற்று அசத்தினார்.
NEWS EDITOR : RP