கடந்த 2021-ம் ஆண்டில் வடக்கு மண்டலத்தை சேர்ந்த சேத்தன் சர்மா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆண்கள் அணிக்கான தேர்வாளர்களின் தலைவரை தேர்ந்தெடுக்க முயற்சி செய்து வருகிறது.
தலைமை தேர்வாளர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் ஆடிய நாட்களில் சிறப்பாக ஆடி உள்ளார். மேலும் அணி வெற்றி பெற முழு பங்களிப்பை அளிக்கும் வீரராக இருந்துள்ளார்.இதற்காக அவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்து தெரிய வந்துள்ளது. தற்போது இந்த குழுவின் தற்காலிக தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்பட்டு வருகிறார். மேலும் இந்திய தீவுகளில் டி20, டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி ஆட உள்ளது. எனவே டி20 அணி தேர்வு செய்ய உடனடியாக புதிய தேர்வுக் குழுவை நியமிக்க வேண்டியுள்ளது.
இந்த தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அகர்கர் முன்னணியில் உள்ளார். 5 மண்டலங்களில் இருந்து தலா ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்படுவார். தேர்வர்கள் பணிக்கான தலைவருக்கு ரூ.1 கோடியும், உறுப்பினர்களுக்கு தலா ரூ.90 லட்சமும் ஊதியமாக நிர்ணயிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
NEWS EDITOR : RP