சமீபத்தில் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ளும் இவர் சமீபத்தில் சிறிது உடல் எடை கூடியதற்காக தினமும் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஜிம் பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளில் ஆர்வம் காட்டும் ரித்திகா அண்மையில் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ரித்திகா சிங்குக்கு படபிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த ரித்திகா சிங், ‘இதனை பார்க்கும்போது ஒரு ஓநாயுடன் சண்டையிட்டது போல் தெரிகிறது’ எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து படபிடிப்பின் போது என்ன நடந்தது என்பதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், ‘நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். அங்கே கண்ணாடி இருக்கிறது கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்கள்.
ஆனால் நான் தான் கேட்காமல் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து விட்டேன். அதனால் தான் இது நடந்தது’ என தெரிவித்துள்ளார். மேலும் நான் இப்போது எந்த வலியையும் உணரவில்லை. ஆனால் இதில் சில காயங்கள் மிகவும் ஆழமாக இருப்பதால் நிச்சயம் வலிக்கும் என நம்புகிறேன்.