பிக் பாஸ் சீசன் 7 தனியார் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. நீண்ட காலமாக படத்தில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த பிரபல நடிகை விசித்திராவும் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். தற்போதைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில், மிகவும் வயதான போட்டியாளராக விசித்திரா உள்ளார்.ஓரிரு வாரங்களில் பிக் பாஸிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 75 நாள்களை கடந்தும் போட்டியில் நீடித்து வருகிறார். ரசிகர்களின் பேராதரவும் விசித்திராவுக்கு உள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் அதிமாக விசித்ரா மற்றும் தினேஷுக்கு இடையே சண்டை நிலவி வருகிறது.
இந்த தினேஷ், விஜய் டீவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமான நடிகை ரச்சிதாவின் கணவர் ஆவார். தினேஷும் ரச்சிதாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினேஷுக்கு எதிராக குரல் கொடுக்கும் விசித்ராவுக்கு ஆதரவாக நடிகை ரச்சிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விசித்ரா ஆதரவாக சிங்கப் பெண்ணே பாடலை பதிவிட்டு ‘தி ஃபைட்டர்’ என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகியுள்ளது.
NEWS EDITOR : RP