அடிக்கடி சர்ச்சை சம்பவங்களில் சிக்கும் மலையாள நடிகர் விநாயகன் இப்போதும், இதற்கு முன்பும் செய்த ‘சம்பவங்கள்’ குறித்து பார்ப்போம். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் அழுத்தமான வில்லன் நடிகராக பாராட்டப்பட்டவர் நடிகர் விநாயகன். படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ரஜினியே அவரது நடிப்பை பாராட்டியிருந்தார். சமூக வலைதள ‘கன்டென்ட்’களில் ரஜினியை விட விநாயகனே வியாபித்திருந்தது சமீத்திய வரலாறு. இதற்கு முன்னதாக அவர் தமிழில் ‘திமிரு’, ‘சிலம்பாட்டம்’,‘மரியான்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளியான ‘கம்மாட்டிப்பாடம்’ படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீஸார் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். அங்கு வந்த விநாயகன் மது போதையில் இருந்துள்ளார். அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளில் அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் ‘மீ டூ’ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 10 பெண்களுடன் அவர்களின் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், பாலியல் உறவுதான் மீ டூ என்றால் இனியும் அதை தொடர்வேன் என பேசியிருந்தார். நாயகி நவ்யா நாயர் அமர்ந்திருந்தது மேடையில் அவர் இப்படி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், சர்ச்சையைத் தொடர்ந்து மன்னிப்புக் கோரினார்.கடந்த ஜூலை மாதம் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலத்தின்போது விநாயகன், உம்மன் சாண்டி குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர், “யார் இந்த உம்மன் சாண்டி? அவரது மறைவு செய்திகளை இந்த அளவுக்கு பெரிதாக்குவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து “ஊடகங்களை விமர்சித்தேனே தவிர உம்மன்சாண்டி மீது தனிப்பட்ட தாக்குதலை நிகழ்த்துவது எனது நோக்கமில்லை” என விளக்கமளித்திருந்தார் விநாயகன். எனினும், அந்த வீடியோ காரணமாக எர்ணாகுளம் டவுன் வடக்கு போலீஸார், அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.விநாயகன் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக அவர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விநாயகன் விளக்கமளித்தபோது, “சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது; எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளின் ரெக்கார்டுகளை நான் வைத்திருப்பதில்லை.
NEWS EDITOR : RP