நடிகர் விஜய் நெல்லையில் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகையில் வைத்து நிவாரண உதவிகளை வழங்க நேரில் கலந்து கொண்டார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் களத்தில் நின்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது.அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கினார்.
Please follow and like us: