நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் ட்ரீட்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது 48 வது பிறந்தநாளை வரும் நாளை கொண்டாடவுள்ளார். இதற்காக அவர் தற்போது நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் முன்னோட்ட வீடியோவை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஸ்பெஷல் போஸ்டருடன் வெளியிட்டது.

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக வெளியாக இருப்பது ‘கங்குவா’ படம். சூர்யா நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்தப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தொடர்ச்சியாக பேமிலி டிராமா படங்களை இயக்கி கமர்ஷியல்ரீதியாக தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த இயக்குநர் சிவா, தற்போது முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ள ‘கங்குவா’ படத்தினை தனது பாணியிலிருந்து முற்றிலும் வேறு விதமாக இயக்கி வருகிறார்.

3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கங்குவா’ படம் 10 மொழிகளில் தயாராகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இரு மடங்கு பட்ஜெட்டில் இந்தப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். அத்துடன் இந்தப்படத்தில் பல கெட்டப்களில் நடிக்கும் சூர்யா, இதற்காக உடல் எடையை அதிகரித்து மாஸ் லுக்கில் வலம் வருகிறார்.இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் சூர்யாவின் முகம் முழுமையாக  தெரியாமல் ,கையில் வாளேந்தி இருப்பதை போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை நாளை அதாவது  ஜூலை 23-ந் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு  வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram