நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியான 3-வது திரைப்படம் லால் சலாம். இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தில் ‘கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவான இப்படம் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Please follow and like us: