அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஜப்பானிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பிரசன்னா இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தான் நடிப்பது உண்மை ~ நடிகர் பிரசன்னா..!!
Please follow and like us: