வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 8ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP