அஜித்தின் 62-வது படமான இதனை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் தாமதமாக தொடங்கியது. படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாக துவங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கார் சேசிங் காட்சி ஒன்றில் அஜித் டூப் போடாமல் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆரவ் கைகளை கட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு, அஜித் காரில் செல்லும் போது, கார் தலைகீழாக கவிழ்கிறது. இந்த காட்சியில் அஜித் நடித்து முடித்ததும் இயக்குநர் ஓகே என சொல்லியவுடன் காரில் உள்ள அஜித் மற்றும் ஆரவ் ஆகிய இருவரையும் மீட்க படக்குழுவினர் பதறியடித்து கொண்டு ஓடுகிறார்கள். இந்த காட்சியில் அஜித் டூப் எதுவும் இல்லாமல் நடித்து மெர்சல் செய்துள்ளார்.
“விடாமுயற்சி” படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ, மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட.. அந்த வீடியோ வைரலாகி வருகிறது..!!
Please follow and like us: