பாகிஸ்தானில் உள்ள ஒரு பிரபல உணவகம் மூடப்பட்ட செய்தி அதன் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் நிர்வாகத்திடமிருந்து பணிநீக்கக் கடிதங்களைப் பெற்றவுடன் மயக்கமடைந்து கிழித்து விழுந்தனர்.ஜூன் 11-ம் தேதி பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரபல உணவகமான மோனாலை மூட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மோனல் மட்டுமல்ல, இஸ்லாமாபாத்தின் மார்கல்லா ஹில்ஸ் தேசிய பூங்காவில் உள்ள அனைத்து உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டது.செப்டம்பர் 11, 2024 அன்று அதன் செயல்பாடுகளை முடித்துக் கொள்வதாக மோனல் உறிமையாலர் அறிவித்தார். இதனால் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையின்றி தவிக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பணிநீக்கக் கடிதங்களை பெற்ற ஒரு ஊழியர் சரிந்து விழுவதைக் காட்டுகிறது.
பணிநீக்கக் கடிதத்தை பெற்ற ஒரு ஊழியர் சரிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!!
Please follow and like us: