ரேஷன் கடைகளில் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு பரிசுத்தொகையில் வெல்லம் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான முடிவை இந்த வாரமே தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை எஸ் விமலநாதன் சார்பாக இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். கடந்த வருடம் வெல்லம் வழங்கப்படவில்லை. வெல்லம் உருகிவிடுகிறது.. அதேபோல் இது தொடர்பாக புகார்கள் வைக்கப்படுகின்றன என்பதால் சர்க்கரை வழங்கப்படுகிறது. இந்த நிலையில்தான் வழக்கு காரணமாக இந்த முறை வெல்லம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறதாம்.