பொதுவாக, எல்லோரும் வீடுகளில் செல்ல பிராணிகளை அன்போடு வளர்ப்பதற்கு மிக முக்கிய காரணம், இரவு வேளைகளில் தன் வீட்டை பாதுகாத்து திருட வரும் நபர்களை எச்சரிப்பதற்காகத்தான். அதனால் தான் இரவு எல்லோரும் உறங்கும் முன்பு வீட்டு வாசலில் தனது செல்லப்பிராணியான நாயை கட்டி வைத்துவிட்டு உறங்க செல்வார்கள். நாயும் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றார் போல யாராவது அடையாளம் தெரியாத நபர்கள் வந்தால் எச்சரிக்கை ஒளி எழுப்பும்.
அதிலும் குறிப்பாக, ஒரு நாயும், திருடனும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் பொழுது, நாய் தவித்து போய் ஊடுருவ வந்த நபருக்கு எதிராக எச்சரிக்கை எழுப்பும். ஆனால் இங்கு ஒரு நாய் எந்தவித செய்கையும் காட்டாமல் திருட வந்த நபருடன் செல்லமாக கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட பசிபிக் கடற்கரைக்கு அருகில் உள்ள சான் டியாகோவில் உள்ள ஒருவரின் வீட்டு கேரேஜுக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்து 2019 கருப்பு எலக்ட்ரா 3-வேக மிதிவண்டியைத் திருடியுள்ளார். திருடப்பட்ட அந்த சைக்கிளின் விலை $1,300 டாலர் அதாவது தோராயமாக சுமார் ₹ 1,07,555 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்குமாம். இச்சம்பவம் தொடர்பாக சான் டியாகோ காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் திருட வந்த அடையாளம் தெரியாத நபர், சைக்கிளை திருடிச்செல்லும் போது, அங்கிருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் ஓடி வந்து தடுக்கிறது. உடனடியாக அந்த நாயை கட்டுப்படுத்த அதனுடன் அந்த அடையாளம் தெரியாத நபர் கொஞ்சி விளையாடியுள்ளார். காரணம் அந்த நாய் குறைத்து தனது உரிமையாளரிடம் செய்கை ஒளி எழுப்பி விடக்கூடாது என்பற்காகத்தான். அந்த திருடனும் நினைத்தது போல் அந்த நாயும் குறைக்கவில்லை.
சான் டியாகோ காவல்துறையினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவோடு சேர்த்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் , “ஜூலை 15, 2023 அன்று, சுமார் இரவு 10:40 மணியளவில், ஒரு வீட்டின் கேரேஜுக்குள் நுழைந்தார்.இந்த பதிவு ஆகஸ்ட் 4 அன்று பகிரப்பட்டது. பகிரப்பட்டதிலிருந்து, இது 44,000 க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளதோடு, சுமார் 2 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
திருட வந்த நபர் முதலில் அங்கிருந்த நாயை கொஞ்சி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். ஒரு நீலம் மற்றும் வெள்ளை தொப்பி, சாம்பல் சட்டை, நீல ஷார்ட்ஸ் மற்றும் ஆரஞ்சு தடகள காலணிகள் அணிந்திருக்கும் அந்த நபர் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கிறார் என்று அவரின் அங்க அடையாளங்களை கூறி பதிவிட்டுள்ளனர். மேற்கொண்டு தீரமாக அந்த நபரை தேடி வருகின்றனர்.
NEWS EDITOR : RP