கடந்த சில ஆண்டுகளாக இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பாலி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆகப் பதிவாகியிருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கிலி ஏர் பகுதியிலிருந்து 181 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலி கடலின் மையத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், அவை முறையே 5.4 ஆகவும், 5.6 ஆகவும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன .நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
NEWS EDITOR : RP
Please follow and like us: