அமெரிக்க கடற்படை அணுசக்தி தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஜோயி ஜோசல்சன் என்பவர், தனது அறைக்கு தூங்க சென்றிருக்கிறார். அப்போது அவர் கட்டிலுக்கு அருகில் ஏதோ சப்தம் கேட்டுள்ளது. உடனே அவர் எழுந்து கட்டிலுக்கு அடியில் பாம்பின் சட்டை கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அறை முழுவதும் தேடி பார்த்தார். அப்போது கட்டிலுக்கு அருகில் உள்ள மேசைக்கு பின்புறத்தில் பாம்பு ஒன்று இருந்தது.அந்த பாம்பை எடுத்த ஜோசல்சன் தனது தோலில் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்று காட்டுகிறார். இது முழுவதையும் வீடியோவாக பதிவு செய்த அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். கடந்த 23ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ 11.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
Please follow and like us: