வாணாபுரம் அருகே உள்ள மெய்யூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பவரின் மனைவி கலைவாணி (வயது 37). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த கலைவாணியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த கலைவாணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வாணாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
NEWS EDITOR : RP
Please follow and like us: