திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பையில் நீர்க் கட்டி இருப்பதாகக் கூறி அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.பின்னர் வேறு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். இதில், அவரது கருப்பை அகற்றப்பட்டதும், வயிற்றில் மருத்துவத் துணி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனது அனுமதியின்றி கருப்பையை அகற்றியதுடன், வயிற்றில் மருத்துவத் துணியை வைத்துத் தைத்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் அந்தப் பெண் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை…!!
Please follow and like us: