விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய்யுடன் நடிகை ஜோதிகா ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் அண்மையில் வெளியானது.
இந்த படத்தில் விஜய், அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும் மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கடந்த புதன்கிழமை அதிகாலை அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றடைந்தனர். அங்கு 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.அதுவும் ரியல் ஃபேன் பாய் மோடுக்கு மாறியுள்ள அவர், படம் ஓடிக்கொண்டிருக்கும் போது எழுந்துநின்று அப்ளாஸ் செய்துள்ளார். இதனை போட்டோ எடுத்துள்ள வெங்கட்பிரபு தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். விஜய்யின் இந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் ஃபேன் பாய் மோடுக்கு மாறியுள்ளார். பொதுஇடங்களிலும் படப்பிடிப்பிலும் ரொம்பவே அமைதியாக இருக்கும் விஜய், நண்பர்களுடன் மட்டுமே ஜாலியாக இருப்பார் என சொல்லப்படுகிறது. அதேநேரம் விஜய் படத்தின் FDFS பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருப்பது தான் வழக்கம். ஆனால், அமெரிக்கா சென்றுள்ள தளபதி, ஹாலிவுட் படமான Equalizer 3 FDFS பார்த்து ரசித்துள்ளார்.
NEWS EDITOR : RP