ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மாதன் சாவ். இவரது மனைவி பூனம் தேவி (வயது 35). இவர்கள் குடும்பத்துடன் தளி அருகே உள்ள அகலகோட்டை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பூனம் தேவி தனது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று கணவாிடம் கூறினார். அப்போது மாதன் சாவ், 10 நாட்கள் கழித்து செல்லலாம் என கூறி ஊருக்கு அழைத்து செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பூனம் தேவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக அவர்கள் 2 பேரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கணவர் ஊருக்கு அழைத்து செல்லாததால் மனமுடைந்த பூனம் தேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
NEWS EDITOR : RP