ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி பூமிக்கு திரும்பும் அல் நெயாடியிடம், பூமியில் அவருக்குப் பிடித்த அம்சம் என்ன என்று அவரது மகன் கேட்கிறார். அதற்கு நீ தான் என பதில் அளிக்கிறார். மேலும் பூமியில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே போல் தான் நாங்களும் இங்கு அனைத்து வசதிகளுடன் இருக்கிறோம் என கூறினார்.
என் பெயர் அப்துல்லா சுல்தான் அல் நெயாடி” என விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடியின் மகன் பூமியிலிருந்து தனது அப்பாவிடம் கேள்வியைக் கேட்கும்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
தந்தை-மகன் இருவருக்கும் இடையேயான பாச பரிமாற்றத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கடந்த 10ஆம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். எங்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள் என குறும்பு நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
NEWS EDITOR : RP