த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. அம்மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் அதிகாலை 4 மணி காட்சியை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள், ‘லியோ’ படம் ஒரு தரமான சம்பவம் என தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு அனுமதி வழங்கியபடி காலை 9 மணிக்கு லியோ படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் லியோ படத்தை காண இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் வருகை தந்தனர். ஆரவாரம் செய்து அவர்களை ரசிகர்கள் வரவேற்றனர்.
முதல் நாள் முதல் காட்சிக்கு பெயர் போன சென்னை ரோகிணி திரையரங்கில் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. மாறாக காலை 11.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னையின் மற்ற திரையரங்குகளில் விஜய்-ன் கட்-வுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகளை வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
திருநெல்வேலியில் ‘லியோ’ திரைப்பட கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் டிஜே இசையுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கொண்டாட்டங்களை பாதியில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து டிஜே, பேப்பர், பட்டாசுகள் போன்றவைகளை திரையரங்கு வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

சேலத்தில் லியோ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகள் முன்பு பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாடினர். அங்குள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர். அப்போது ரசிகர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் திரையரங்குகளின் வளாகத்தில் விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன், பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருச்செந்தூரில் ‘லியோ’ படம் வெற்றி பெற வேண்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் சேலை, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.புதுக்கோட்டையில் ‘லியோ’ வெளியான திரையரங்கு ஒன்றில் ரசிகர் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டனர். விஜய் ரசிகர்களான வெங்கடேஷ் மற்றும் மஞ்சுளா, நாளை திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், இன்று லியோ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே, மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் மாலை மாற்றி, மோதிரம் அணிவித்துக் கொண்டனர். நடிகர் விஜய் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால், கிறிஸ்தவ முறைப்படி இன்று திருமணம் செய்துகொண்டதாக மணமகன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP