நியூயார்க் நகரத்தின் டயமண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், 23 வயதுடைய வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் இரவு சுமார் 10 மணி நேரம் சிக்கிக் கொண்டார்.
அக்டோபர் 24 அன்று மாலை 7 மணியளவில் 580 ஐந்தாவது அவென்யூ கட்டிடத்திற்குள் சிக்கினார். இறுதியில் அக்டோபர் 25 ஆம் தேதி காலை 6 மணியளவில் அவர் மீட்கப்பட்டார்.
இந்த நகைக்கடை, வாடிக்கையாளர்களுக்காக பாதுகாப்பு பெட்டக சேவையையும் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் நகைக்கடையின் பாதுகாப்பு பெட்டகத்திற்குள் தனது நகைகளை வைக்கச் சென்ற போது அந்த வாடிக்கையாளர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. வாடிக்கையாளர் உள்ளே இருப்பதை உணராமல் வேலையிலிருந்த ஊழியர்கள் பெட்டகத்தை மூடியுள்ளனர்.
பின்னர் வெளியே வர முடியாமல் தவித்த அந்த வாடிக்கையாளர், தன்னிடம் இருந்த செல்போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டார். இதனையடுத்து, மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த மீட்புப் படையினர், நகைக்கடையின் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியன்றனர். ஆனால், பாதுகாப்பு பெட்டகத்தை மூடிவிட்டால், குறிப்பிட நேரத்திற்குப் பிறகு அதனை திறக்க முடியாது என கடை ஊழியர்கள் தெரிவித்தனர். பின்னர், பெட்டகத்தின் வடிவம் குறித்து மதிப்பீடு செய்த பிறகு, மீட்புக் குழுவினர் சுமார் 30 அங்குல கான்கிரீட்டை வெட்டத் தொடங்கினர். சுமார் 10 மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் இரும்பு அரண் பகுதிக்கு வந்தனர். அதனை உடைக்க முயன்ற போது சுமார் 10 மணி நேரத்திற்குப் பிறகு, கதவுகள் தானாகவே திறந்து கொண்டன.
NEWS EDITOR : RP