பரமத்திவேலூரில் ரூ.99 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது..!!

Spread the love

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

மொத்தம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 82-க்கு ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 475 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.22.81-க்கும், குறைந்தபட்சமாக ரூ.16.50-க்கும், சராசரியாக ரூ.21.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.99 ஆயிரத்து 684-க்கு ஏலம் நடைபெற்றது.இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.06-க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram