கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மூன்றரை வயது சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல் அறிகுறிகள் இருந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் புதுசேரியில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு நான்கு வயது சிறுவன் கோழிகோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் பரிசோதனை முடிவுகள் நாளை வரவுள்ளன.கடந்த இரு மாதங்களில் இரு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு பலியான நிலையில், மேலும் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Please follow and like us: