வயது என்பது எதற்கும் தடையில்லை என்பதை பல முதியவர்கள் பல தருணங்களில் அவ்வபோது நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் விடாமுயற்சியும், துணிச்சலும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அலைன்ராபர்ட் என்ற முதியவர் நிரூபித்துள்ளார். 60 வயதான இவர் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி மலை ஏறும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைராலாகி வருகிறது.இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள வெர்டன் மலையில் வெறுங்கால்களுடன் மலை ஏறும் வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வயாளர்களை கடந்துள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Please follow and like us: