இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இறந்தவரின் மாமியார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த பெண் வீட்டில் ரகசியமாக கருக்கலைப்பு செய்து கொண்டது இதுவரை நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பு செய்த சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து இறந்தார்.கருக்கலைப்பு செய்ய தனியார் மருத்துவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருவில் இருப்பது பெண் குழந்தை என குடும்பத்தினர் அறிந்ததும் வீட்டில் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Please follow and like us: