ரூ.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.