தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று (டிச.18) தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,135க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், தங்கம் விலை இன்று (டிச.19) மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.