நடிகர் ரஜினிக்காந்த் 1975ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அபூர்வ ராகங்கள் எனும் படத்தில் அறிமுகமாகிய அவர், பல ஹிட் திரைப்படங்களை கொடுத்ததோடு சில தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஆனால் அவரது உழைப்பு மற்றும் திறமையினால் ஆக்ஷன் ஹீரோ மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து 50 ஆண்டுகால சினிமா பயணத்தில், கருப்பு – வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3-டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முக்கிய நடிகர் ஆக மாறினார். 50 ஆண்டுகால சினிமா அனுபவம், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், எண்ணற்ற விருதுகள் என புகழின் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் இன்று அவரது 74 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், மற்றும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.