உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் , கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது ஆட்குறைப்பு, ஆடியோ, வீடியோ கால் வசதி என பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் புதிய பெண் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ட்விட்டருக்கு புதிய தலைமை அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் 6 வாரங்களில் தனது பணியை தொடங்குவார் என்றும் கூறியுள்ளார். தயாரிப்பு, மென் பொருள், நிர்வாக தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தலைவராக தமது பங்களிப்பு இருக்கும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓவாக என்.பி.சி யுனிவர்சல் நிறுவன தலைவர் லிண்டா யாக்கரினோ (Linda Yaccarino)நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.