கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதுல்யா ரவி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2000 பணம் திருடு போயியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வடவள்ளி காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அதுல்யா ரவி வீட்டில் வேலை செய்து வந்த செல்வி (46) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்வி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பாஸ்போர்ட் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
Please follow and like us: