நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், இந்த படத்தை பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. விஜய் – சமந்தா ஜோடி சேரும் 4-வது படம் இதுவாகும்.
Please follow and like us: