உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷ்யா, அந்த நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் ரஷ்ய மொழி பேசுவோரைப் பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை உள்ளூர் கிளர்ச்சிப் படையினருடன் இணைந்து கைப்பற்றியது.அந்த 4 பிரதேசங்களில் இன்னும் உக்ரைன் படையினரிடம் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவும் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. கடந்த 28 மாதங்களாக ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
Please follow and like us: